FILM REVIEWS: October 2012

Friday, October 5, 2012

rk-selvamani-akila

ஆர்.கே.செல்வமணியின் ‘அகிலா’

 
  ஸ்ரீ மகாலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி  இயக்கும் ‘அகிலா’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இத்திரைப்படத்தில் பி. ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா, பேபி யுக்தா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஆர்.கே.செல்வமணி திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
புரட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மக்களின் உயிரைக் கொல்லும் எந்த இயக்கத்தையும் மக்கள் மன்னிப்பதும் இல்லை, மக்கள் சக்தி இல்லாமல் எந்த இயக்கமும் ஜெயித்ததாக வரலாறும் இல்லை. தீவிரவாதம் என்பது ஒரு வழிபாதை, அதில் மீண்டவர்கள் எவரும் இல்லை, மாண்டவர்கள் தான் அதிகம், என்ற கருத்தினை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.
வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியான அமீர்தி காட்டில் படமாக்கப்பட்டுள்ளது, சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் படப்பிடிப்பு நடத்துள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தீவிரவாதியாக  நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ram-charan-new


ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண்’

 டிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த மாவீரன், ரகளை, சிறுத்தைப்புலி போன்ற படங்கள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ராம்சரண் நடித்த ஆரஞ்ச் என்ற தெலுங்கு வெற்றிப் படம் “ராம் சரண்” என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
கதாநாயகியாக ஜெனிலியா நடிக்கிறார் மற்றும் பிரபு, பிரகாஷ்ராஜ், சுஜா போன்ற நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
காதல் என்பது ரொம்ப நாள் நிலைக்கிற விஷயமில்லை… சீக்கிரமே துவங்கி சீக்கிரமே கருகிப் போகிற விஷயம் என்கிற நினைப்பில் இருக்கும் ராம்சரண்…
காதல் ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிற அருமையான விஷயம் என்று நினைக்கிற ஜெனிலியா…
இரு வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட இவர்கள் இருவரும் ஒரே எண்ணங்களுடன் இணையும் அருமையான காதல் கதை தான் ராம்சரண்.
கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர் பொம்மரில்லு பாஸ்கர்.
அறிவுமதி, விவேகா, யுகபாரதி, அருண்பாரதி, ஜெயமுரசு ஆகியோரின் பாடல்களுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலேயே படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

pizza readt tamil-new


‘பீட்சா’ ரெடி…

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் ‘பீட்சா’. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன், சிம்ஹா, பூஜா, கருணா, வீர சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘அட்டகத்தி’ தயாரிப்பாளர் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு காதல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.  சங்கம் சினிமாஸ் தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையிடுகிறது.
பீட்சா டெலிவரி செய்யும் ஒருவர், ஒரு மர்மமான இடத்திற்கு சென்ற போது, அவரது வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட மாற்றத்தையெல்லாம் உண்டு பண்ணுகிறது என்பதுதான் படத்தின் கதை.
தென்மேற்கு பருவக்காற்று, சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் கிடைத்துள்ள எதிர்பார்ப்பு இப்படக்குழுவினருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,  விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Infolinks In Text Ads

About This Blog

  © Free Blogger Templates 'Greenery' by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Share
ShareSidebar