ram-charan-new
ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண்’
நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த மாவீரன், ரகளை, சிறுத்தைப்புலி போன்ற படங்கள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ராம்சரண் நடித்த ஆரஞ்ச் என்ற தெலுங்கு வெற்றிப் படம் “ராம் சரண்” என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
கதாநாயகியாக ஜெனிலியா நடிக்கிறார் மற்றும் பிரபு, பிரகாஷ்ராஜ், சுஜா போன்ற நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
காதல் என்பது ரொம்ப நாள் நிலைக்கிற விஷயமில்லை… சீக்கிரமே துவங்கி சீக்கிரமே கருகிப் போகிற விஷயம் என்கிற நினைப்பில் இருக்கும் ராம்சரண்…
காதல் ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிற அருமையான விஷயம் என்று நினைக்கிற ஜெனிலியா…
இரு வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட இவர்கள் இருவரும் ஒரே எண்ணங்களுடன் இணையும் அருமையான காதல் கதை தான் ராம்சரண்.
கதை, திரைக்கதை, டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர் பொம்மரில்லு பாஸ்கர்.
அறிவுமதி, விவேகா, யுகபாரதி, அருண்பாரதி, ஜெயமுரசு ஆகியோரின் பாடல்களுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலேயே படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
0 comments:
Post a Comment