rk-selvamani-akila
ஆர்.கே.செல்வமணியின் ‘அகிலா’
ஸ்ரீ மகாலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி இயக்கும் ‘அகிலா’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இத்திரைப்படத்தில் பி. ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா, பேபி யுக்தா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஆர்.கே.செல்வமணி திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
புரட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மக்களின் உயிரைக் கொல்லும் எந்த இயக்கத்தையும் மக்கள் மன்னிப்பதும் இல்லை, மக்கள் சக்தி இல்லாமல் எந்த இயக்கமும் ஜெயித்ததாக வரலாறும் இல்லை. தீவிரவாதம் என்பது ஒரு வழிபாதை, அதில் மீண்டவர்கள் எவரும் இல்லை, மாண்டவர்கள் தான் அதிகம், என்ற கருத்தினை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.
வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியான அமீர்தி காட்டில் படமாக்கப்பட்டுள்ளது, சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் படப்பிடிப்பு நடத்துள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தீவிரவாதியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment