pizza readt tamil-new
‘பீட்சா’ ரெடி…

ஒரு காதல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. சங்கம் சினிமாஸ் தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையிடுகிறது.
பீட்சா டெலிவரி செய்யும் ஒருவர், ஒரு மர்மமான இடத்திற்கு சென்ற போது, அவரது வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட மாற்றத்தையெல்லாம் உண்டு பண்ணுகிறது என்பதுதான் படத்தின் கதை.
தென்மேற்கு பருவக்காற்று, சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிடைத்துள்ள எதிர்பார்ப்பு இப்படக்குழுவினருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.